Type Here to Get Search Results !

உலகின் 600 ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி; வடகொரிய தலைவர் உடல் நிலை தொடர்பான வதந்திக்கு பின்னால் அமெரிக்கா

உலகின் பல்வேறு நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி -மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.
கொரோனா என்ற புதிய கொடிய தொற்று நோய் பரவிய சில மாதங்களில், ஒன்றரை லட்சம் பேரின் உயிரைப்பறித்துக் கொண்டது. பல லட்சம் பேரை பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தையே உருக்குலைத்துவிட்டது.

முதல் கொரோனா தடுப்பூசி சீனாவிலிருந்து முதல் மரபணு வரிசை கிடைத்த நான்கு வாரங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. சிஇபிஐ என்ற தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான கூட்டணியின் முதலீடு காரணமாக இது சாத்தியமானது. சிஇபிஐ (CEPI)என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு உலகளாவிய கூட்டமைப்பு ஆகும். தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் மற்றும் பரவலின் போது மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கும் இது உதவுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.

இது தொடர்பான விவரங்களை  உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றன. தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் சிறிதளவுக்கு நம்பிக்கையை அளித்தாலும் இன்னும் ஆதாரப்பூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவும் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வடகொரிய தலைவர் உடல் நிலை தொடர்பான வதந்திக்கு பின்னால் அமெரிக்கா
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உடல் நிலை தொடர்பில் வெளியான பரபரப்புக்கும் பின்னால் அமெரிக்கா செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை சர்வதேச நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் கடந்த உன் 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்த தகவலை முதலில் அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று  வெளியிட்டது. அதை தென் கொரிய ஊடகம் ஒன்றும் உறுதி செய்து ஆதரித்தது.

ஆனால் தற்போது அந்த தகவலானது அமெரிக்கா கிளப்பிவிட்ட புரளியாக இருக்கலாம் என சர்வதேச நிபுணர்கள் குழு சந்தேகின்றனர்.

ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கிம் ஜாங், 15 ஆம் தேதி  வடகொரியாவின் தந்தை என அழைக்கப்படும் கிம் இல் சங்கின் மாபெரும் பிறந்தநாள் நிகழ்ச்சியை கருத்தில் கொள்ளாமல் எப்படி 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வார் என நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில், தென் கொரிய செய்தி நிறுவனம் கிம் ஜாங் உடல் நிலை தொடர்பில் மறுப்பு தெரிவித்ததை அடுத்து,அமெரிக்க செய்தி நிறுவனமும், கிம் ஜாங் உன்னிற்கு எந்த உடல் பிரச்சினையும் இல்லையென்றால், அவர் விரைவில் மீண்டு வருவார், அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்போம் என அமெரிக்க உளவுத்துறை செய்தி நிறுவனம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் வலையில் சிக்காத தலைவர்களில் ஒருவராக கிம் ஜாங் இருந்து வருகிறார். இதனால் அவரது அனைத்து அசைவுகளையும் அமெரிக்கா நோட்டமிட்டு வருகிறது.

11 ஆம் தேதி கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் கிம் ஜாங் திடீரென்று எங்கே சென்றார் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் அமெரிக்க குழப்பத்தில் இருப்பதாகவும்,கொரோனாவால் நிலைகுலைந்துள்ள நிலையில் கிம் ஜாங் உன் அமெரிக்காவிற்கு எதிராக சீனா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து ஏதேனும் திட்டம் தீட்டுகிறாரோ என்ற குழப்பத்தில் அமெரிக்க இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் கிம் ஜாங் உடல்நிலை மோசம் என்ற தகவலை பரப்பினால், தனக்கு ஒன்றும் இல்லை என அவர் வெளியே வருவார் என்பதால்,அமெரிக்கா இத்தகைய தகவலை பரப்புவதாகவும் சில உளவுத்துறை வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.இதற்கிடையே கிம் ஜாங் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவல்களை தென்கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அண்டை  நாடு வடகொரியாவில் அது போன்ற எந்த சூழலும் தென்படவில்லை என்றும் தென்கொரியா விளக்கமளித்துள்ளது. அதேபோல், கிம் ஜாங் உடல்நிலை குறித்து வெளியாகி இருக்கும் செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று சீனா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, வடகொரியாவின் முன்னாள் தலைவரும் கிம் ஜாங்-ன் தந்தையுமான கிம் ஜாங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த தகவலானது,இரண்டு நாட்களுக்கு பின்னர் வடகொரியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்த பின்னரே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad