Type Here to Get Search Results !

சீனா உகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்; இலங்கை கடற்படை முகாமில் மேலும் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட உகான் நகரில், தற்போது கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை தற்போது முடக்கி போட்டு வரும் கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், சீனாவில் தற்போது கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.  சீனாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் 84 %  உகான் நகரில் ஏற்பட்டவைதான்.

இந்த நிலையில்,  சீனாவின் உகான் நகரம் இன்று கொரோனா இல்லாத நகரமாகிவிட்டது. புதிய தொற்றுக்கள் இல்லை, அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. 

உகானில் 50,333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். உகான் நகரில் மட்டும் கொரோனாவுக்கு ஏற்பட்ட பலி எண்ணிக்கை  3869 ஆக இருந்தது. கொரோனா பரவத்தொடங்கியதும் உகான் நகர் முழுமையாக முடக்கப்பட்டது. 76 நாட்களுக்குப் பிறகு கடந்த 8 ஆம் தேதிதான், உகான் நகரில் முழு முடக்கம் விலக்கப்பட்டது.

இலங்கை கடற்படை முகாமில் மேலும் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் உள்ள கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்த முகாம் மூடப்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து விடுப்பு எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டு 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கடற்படை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பணி காரணமாக மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்து வீரர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 2 நாட்களில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad