Type Here to Get Search Results !

கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு; அமெரிக்காவில் 2 வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா

கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகள்  மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன.  அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலும்,அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள் உள்ளன.

பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதையே பார்க்கிறோம்.

எந்த தவறும் செய்யாதீர்கள் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றை ஜனவரி 30 அன்று நாங்கள் அவசரகாலம் சரியான நேரத்தில் அறிவித்தோம். உலகம் பதிலளிக்க போதுமான நேரம் உள்ளது என்று கூறினார்.

அமெரிக்காவில் 2 வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2 வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரு வேறு பகுதிகளில் வசித்து வரும் 2 வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இவை இரண்டுக்கும் லேசான அறிகுறிகளே தென்படுகின்றன.  அதனால், குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு அவை வரும் என தெரிவித்துள்ளது.

இவற்றில், முதல் பூனையை வளர்ப்போர் வீட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.  வீட்டிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதித்த நபர் எவரேனுடனோ ஏற்பட்ட தொடர்பில் இந்த பூனைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது பூனையின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதன்பின்பே பூனைக்கு, சுவாச பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய வந்தன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலில் வளர்ப்பு பிராணிகளுக்கு எந்த பங்கும் இல்லை.  அதற்கான சான்றுகளும் இல்லை.  அதனால் வளர்ப்பு பிராணிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிராங்ஸ் விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்றுக்கு, இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட இருமலை தொடர்ந்து நடந்த பரிசோதனையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதேபோன்று 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் அறிகுறிகள் தென்பட்டன.  எந்தவித அறிகுறிகளும் தென்படாத ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விலங்கியல் பணியாளரிடம் இருந்து இந்த விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என கூறப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 1.84 லட்சத்தை தாண்டியது, பாதிப்பு 26 லட்சத்தை தாண்டியது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 184,204 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,637,414 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 717,625 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,674 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 652 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,960 பேர் குணமடைந்தனர்.
 
* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 848,735 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,085ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187,327 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208,389 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,340 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159,877 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,100 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133,495 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,391 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,996 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,262 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,889 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,315 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150,648 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,054 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,842 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,798 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 2,376 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,509 பேரும், பிரேசில் நாட்டில் 2,924 பேரும், சுவீடன் நாட்டில் 1,937 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,974 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad