Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது; மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

இந்தியாவின் கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பரவல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முழுவதும் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077ல் இருந்து 24,506 ஆக உயர்வடைந்திரு்ந்தது. மேலும் பலி எண்ணிக்கை 775 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 24 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,210 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 779 ஆக உயர்ந்துள்ளது என்றும், மிக அதிகமாக மராட்டியத்தில் சுமார் 301 பேரும், குஜராத்தில் 127 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1490 ஆகவும், பலி எண்ணிக்கை 56 பேராகவும் உள்ளது.

மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே  3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

மேலும், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் தினந்தோறும் நடைபெறும் என்றும், மே 4-ம் தேதியன்று காலை 9 .05 மணி முதல் 9.29 மணிக்குள், நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரியப் பாதுகாப்புடன் திருக்கல்யாண சம்பிரதாயங்களை நடத்துவார்கள் என்றும் இந்த நிகழ்வினை கோவில் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வான மண்டூக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad