அமெரிக்காவில் கொரோனா வைரசால் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலி; அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் அந்நாட்டில் நேற்று 1,738 பேர் பலியாகி இருந்தனர்.  இதனால் பலி எண்ணிக்கை 46 அயிரத்து 583 ஆக உயர்ந்தது.

இதேபோன்று 8 லட்சத்து 34 ஆயிரத்து 858 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  இது ஸ்பெயின் நாட்டை விட 4 மடங்கு  அதிகம்.  ஸ்பெயினில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்டுள்ளது.  இந்த நாடுகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.

இதேபோன்று உலக அளவில் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.

இந்த எண்ணிக்கை இன்று உயர்ந்து உலக அளவில் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்.  இதுவரை 7 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தினை நெருங்கி வருகிறது.  இது மற்ற நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்.  பாதிப்பு எண்ணிக்கையும் 8 லட்சத்து 80 ஆயிரத்து 204 ஆக உயர்ந்து உள்ளது.  85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

எங்களின் வலிமை பற்றி தெரியும் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா நடந்துகொண்டால், வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அனைத்தும் நொறுக்கப்படும் என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர்.

ஈரானின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டது.

இந்நிலையில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலமி எச்சரித்துள்ளார்.

இது குறித்து சலமி கூறியதாவது:-

எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறுவிளைவித்தால், மிக மோசமாக எதிர்வினையை சந்திக்க நேரிடும்.அவர்களுக்கு எங்களின் வலிமைப் பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என கருதுகிறோம் என்றார்.

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகனைத் தாக்குதல் நடத்தி கொன்றது.

அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் மீது ஈரான் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும்.

தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிற நிலையில்,இவ்விருநாடுகளும் மீண்டும் போர்ச் சூழலை நோக்கி நகர்வது ஆபத்தான போக்காகப் பார்க்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url