இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- “ இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.   கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது. ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

புதுச்சேரி மஹே, கர்நாடாகாவின் குடகு,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை.  இந்தியாவில் 59 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று  ஏற்படவில்லை” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ``மக்கள் சமைக்கப்பட்ட உணவுக்காக நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்து கிடப்பதை கண்கூடாக பார்க்கிறோம். இதயமே இல்லாத அரசு தான் இப்படி எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்கும். ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அவர்களை பட்டினியில் இருந்து காப்பாற்ற வேண்டும். இந்திய உணவு கழகத்தின் மூலம் 7.70 கோடி டன் உணவு தானியத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். பிரதமரும் நிதியஅமைச்சரும் இதற்கு பதிலளிக்காமல் இருப்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: வெளி மாநிலத்தில் சிக்கி தவிக்கும் உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் நம்முடையவர்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது நம் அனைவரது கடமையாகும். அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது. இதற்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும். கையில் பணமும், ரேஷன் கார்டும் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவுவது மாநில அரசின் கடமையாகும். அவர்களை தொடர்பு கொள்வதற்காக 1,000 பேர் கொண்ட கட்டுப்பாட்டு அறை, உதவி எண்ணை உபி மாநில அரசு உருவாக்க வேண்டும். வெளி மாநிலத்தில் சிக்கியிருக்கும் உபி தொழிலாளர்களை திரும்பி அழைத்து வருவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும்படி மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 543
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 543-ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனாவில் இருந்து இதுவரை 2,546 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால்  அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21  நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களிடன் 4-வது முறையாக உரையாற்றிய  பிரதமர் நரேந்திர மோடி,  நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் மத்திய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 14.75 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரட்டிப்பாக மாறுவது ஊரடங்குக்கு முன் 3.4 நாட்களாக இருந்தது. தற்போது 7.5 நாட்களாக உள்ளது. புதுச்சேரியில் மஹே, கர்நாடகாவின் கோடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய மாவட்டத்தில் கடந்த 28 நாட்களில் கொரோனா பாதிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 14 நாட்களில் பாதிப்பு எதுவும் பதிவு செய்யப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.கோவா கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது. ஒடிஷா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா பாதித்த 100 நோயாளிகளில் 80% பேர் அறிகுறி எதுவும் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்கள். மேற்கு வங்கத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் சரியாக இயங்கவில்லை என்ற குறைகள் தெரிய வந்துள்ளது. இந்த கருவிகள் யு.எஸ். எஃப்.டி.ஏ அங்கீகரிக்கப்பட்டவை மற்றும் நல்ல தரங்களைக் கொண்டுள்ளன. அவை 20 டிகிரி வெப்பநிலையின் கீழ் சேமிக்கப்பட வேண்டும், இல்லையெனில், முடிவுகள் சரியாக இருக்காது. ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

இந்தியாவில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா தொற்று: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது.

இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கை: காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 543ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்னும் கண்டறியப்படாத பல அறிகுறியற்ற நபர்கள் இருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url