Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது; ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில்,  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20471 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் 3960 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 652 ஆக அதிகரித்துள்ளது.

மாநில வாரியாக மராட்டிய மாநிலத்தில் 5221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 2272 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் 2156 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது: ஐசிஎம்ஆர் விளக்கம்
ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. பிசிஆர் பரிசோதனை மூலம் மட்டுமே கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad