Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 14% ஆக உயர்வு; சோப்பு, மாஸ்க், சானிடைசர், கையுறைக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டாம்: ராகுல் காந்தி கோரிக்கை

ஏப்ரல் 19 ஆம் தேதி கணக்கின்படி தேசிய சராசரியை விட, 18 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 14% ஆக உயர்வு - சுகாதாரத்துறை
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ள நிலையில், இவர்களில் 14 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 553 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 36 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கோவா கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் புதிதாக ஒரு தொற்று கூட ஏற்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  ஊரடங்குக்கு முன்பு 3 .4 நாட்களுக்கு ஒருமுறை பாதிப்பு இரட்டிப்பாகி வந்த நிலையில், தற்போது இரட்டிப்பாகும் விகிதம் 7.5 நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் 14 நாட்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏப்ரல் 19 ஆம் தேதி கணக்கின்படி தேசிய சராசரியை விட, 18 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊடகத்துறையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எதிர்பாராதது என்றும், ஊடகத்துறையில் பணியாற்றுவோர் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் லாவ் அகர்வால் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்படும் 100 பேரில் 80 பேர், எந்த அறிகுறிகளும் இல்லாமலோ அல்லது லேசான அறிகுறிகளுடன் மட்டுமோ உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் கூறியுள்ளது.

சோப்பு, மாஸ்க், சானிடைசர், கையுறைக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டாம்: ராகுல் காந்தி கோரிக்கை
சோப்பு, மாஸ்க், சானிடைசர், கையுறைக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது; கொரோனா தொற்று பரவி வரும் இந்த கடினமான நேரத்தில் அதற்கு சிகிச்சை அளிக்கும சிறிய, பெரிய உபகரணங்கள் அனைத்துக்கும் ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் துப்புறவாளர்களிடம் சோப்புகள், மாஸ்க்குகள், கையுறைகள் போன்றவற்றிற்கு ஜி.எஸ்.டி., வசூலிப்பது தவறானது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் #GSTFreeCorona என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி உள்ளார். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி கட்டணங்கள், மார்ச் 25’ஆம் தேதி இந்தியா முதன்முதலில் ஊரடங்கை தொடங்கியதிலிருந்து இவை அனைத்திற்கும் தேவை அதிகரித்துள்ளது.

இந்த பொருட்களுக்கு தற்போதைய ஸ்லாபின் கீழ் ஐந்து சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி உள்ளது. மே 3-க்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக திரும்பப் பெறத் தொடங்குகையில், முககவசங் ள் மற்றும் சோதனைக் கருவிகளுக்கான கோரிக்கை, ஒரு சிலவற்றைக் குறிப்பிடலாம்.

ஏற்கனவே, டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் பொது இடங்களில் முககவசங்களை கட்டாயமாக்கியுள்ளன. மார்ச் கடைசி வாரத்தில் ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில், வரும் நாட்களில் இந்தியாவுக்கு நான்கு கோடி முககவசங்களை 62 லட்சம் யூனிட் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் தேவைப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad