Type Here to Get Search Results !

சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; இங்கிலாந்தில் நர்சுகளாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி

சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது.  எனினும், உகானில் ஊரடங்கை அமல்படுத்தி பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  ஊரடங்கு தளர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ளூர் அளவில் ஒருவருக்கு பரவி உள்ளது. மீதி 11 பேரும் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒருவர் கூட சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. அதே நேரத்தில் 89 பேர் கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கையும் 49-ல் இருந்து 8 ஆக குறைந்தது.

நேற்று முன்தினம் சீனாவில் 3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பெய்ஜிங்கில் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர் ஆவார். 2 பேர் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது. 77 ஆயிரத்து 346 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தனர்.  சீனாவில் சிகிச்சை பலனின்றி இறந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக உள்ளது.

இங்கிலாந்தில் நர்சுகளாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்தவர்கள், கேட்டி டேவிஸ்(வயது 37), எம்மா டேவிஸ். இரட்டையர்களான இவர்கள் இருவரும் அச்சு அசலாக ஒரே முகச்சாயலை கொண்டவர்கள்.

கல்லூரி படிப்பின்போதும் ஒன்றாக நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படித்து முடித்ததும் இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது.

இந்த நிலையில்தான் அண்மையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவிற்கு இருவரும் மாற்றப்பட்டனர். புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த கேட்டி, எம்மா இருவருமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி கொண்டனர்.

இருவருக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி கேட்டி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எம்மா டேவிஸ் நேற்று முன்தினம் பரிதாபமாக மரணமடைந்தார்.  இரட்டை சகோதரிகளான இந்த நர்சுகளின் மரணம் இங்கிலாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி இவர்களது மற்றொரு சகோதரி ஜோயி டேவிஸ் கண்ணீர் மல்க கூறுகையில், “இருவரும் இந்த உலகிற்கு ஒன்றாகவே வந்தனர். இப்போது ஒன்றாகவே உலகைவிட்டு போய்விட்டனர். பிறப்பும், இறப்பும் அவர்களை பிரிக்கவில்லை” என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad