தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: 12 வயதிற்கு உட்பட்ட 104 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: எந்த வயதினருக்கு அதிகம் பாதிப்பு?
கொரோனா தொற்று அறிகுறியுடன் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 -ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் கொரோனா வைரஸ் வயதானவர்கள், எதிர்ப்புசக்தி குறைந்தவர்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும் என்று கூறப்படுவதால் வயதானவர்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். கொரோனா வைரஸ் முதலில் 55 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் அதிகமாக தாக்கி வந்தது. தற்போது குழந்தைகள் உள்பட வயது வித்தியாசம் பார்க்காமல் இந்நோய் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை.

ஆனால், குழந்தைகள் மூலம் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல் அளித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 55 ஆண் குழந்தைகளுக்கும், 49 பெண் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதன்படி;

^ 0-12 வயதுக்கு உட்பட்டவர்கள்:       55 ஆண், 49 பெண்

^ 13-60 வயதுக்கு உட்பட்டவர்கள்:    1032 ஆண்கள், 471 பெண்கள்

^ 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:       153 ஆண்கள், 61 பெண்கள்

சென்னையில் இதுவரை மொத்தம் 495 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 137 பேரும், திருவிக நகரில் 80 பேரும், தடையார்ப்பேட்டையில் 64 பேரும்,  தேனாம்பேட்டையில் 54 பேரும், கோடம்பாக்கத்தில் 53 பேரும்,  அண்ணாநகரில் 43 பேரும் உள்ளனர்.

மேலும், திருவொற்றியூரில் 14 பேரும், வளசரவாக்கத்தில் 14 பேரும்,  அடையாறில் 10 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 2 நபரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.

மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்

திருவொற்றியூர் - 14 - 0 - 4மணலி - 1 - 0 - 0

மாதவரம் - 3 - 0 - 3

தண்டையார்பேட்டை - 64 - 1 - 15

ராயபுரம் - 137 - 5 - 38

திருவிக நகர் - 80 - 2 - 26

அம்பத்தூர் - 2 - 0 - 0

அண்ணாநகர் - 43 - 3 - 15

தேனாம்பேட்டை - 54 - 0 - 13

கோடம்பாக்கம் - 53 - 0 - 18

வளசரவாக்கம் - 14 - 0 - 5

ஆலந்தூர் - 9 - 0 - 2

அடையார் - 10 - 0 - 4

பெருங்குடி - 8 - 0 - 6

சோழிங்கநல்லூர் - 2 - 0 - 2

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 64.17% பேரும், பெண்கள் 35.83% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 105 பேருக்கும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 100 பேருக்கும் தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 80 வயதுக்கு மேல் 9 பேரும், 9 வயதுக்கு கீழ் நேற்று புதிதாக 4 பேருக்கு தொற்று ஏற்பட்டு 12 பேரும் பாதித்து உள்ளனர்.

10 முதல் 19 வயதுள்ளோர் 40 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 88 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 76 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 44 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 20 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

வயது = பாதித்தோர் எண்ணிக்கை

0-9 = 12

10-19 = 40

20-29 = 100

30-39 = 105

40-49 = 88

50-59 = 76

60-69 = 44

70-79 = 20

80 = 9
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url