இன்று போல என்றும் வாழ்க என வாழ்த்துவது முறையாகாது: சந்திரபாபு நாயுடுவுக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து!

இன்று போல என்றும் வாழ்க என வாழ்த்துவது முறையாகாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். விஜயவாடாவில் 5 அமைச்சர்களுடன் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.


அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் உங்கள் பிறந்த நாளன்று, உங்கள் மாநிலத்தின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்.

வழக்கம் போல "இன்று போல என்றும் வாழ்க" என வாழ்த்துவது முறையாகாது. எனினும் நாட்டிற்கு உங்கள் மாநிலம் அளித்த முதலீட்டில், உரிய பங்கைத் திரும்பக் கேட்கும் உங்கள் போராட்டம் வெல்லட்டும். இவ்வாறு கமல் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url