விஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார்?: பதில் தெரிஞ்சிடுச்சு

விஜய் இளம் ரசிகை ஒருவரின் கையை பிடித்திருப்பதை பார்த்து சிலர் அவர் என்ன இப்படி செய்கிறார் என்றார்கள்.தளபதி விஜய் கேரளாவை சேர்ந்த இளம் ரசிகை ஒருவரின் தோளில் கையை போட்டு, அவரின் கையை பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்.அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.விஜய் ஏன் ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ரசிகை என்றால் இப்படியா செய்ய வேண்டும் என்று சிலர் விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள்.வழக்கமாக எட்டி இருக்கும் விஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார் என்பது தெரிந்துவிட்டது. உங்கை கையை தொடலாமா விஜய் அண்ணா என்று அந்த ரசிகை கேட்டதால் அவர் சரி என்று கூறியுள்ளார். மற்றபடி எதுவும் கிடையாது.விஜய்யுடன் புகைப்படத்தில் இருக்கும் ரசிகையின் பெயர் சரண்யா விசாக். அவர் விஜய்யை சந்தித்த பிறகு ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த வாரம் சென்னையில் வைத்து விஜய் கேரளாவை சேர்ந்த ரசிகர்கள், ரசிகைககளை சந்தித்தார். அந்த சந்திப்பில் சரண்யாவும் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.விஜய் அண்ணாவின் முகம் என் மனதில் பதிந்துள்ளது. அவரை பார்க்கவோ, பேசவோ முடியாது என்று நினைத்தேன். எனக்கு எல்லோரையும் விட விஜய் அண்ணனை தான் மிகவும் பிடிக்கும். விஜய் அண்ணா மீது நான் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் என்னை கிண்டல் செய்தது உண்டு. நான் விஜய் அண்ணாவை பார்க்கவே முடியாது என்றார்கள். இதோ பார்த்துவிட்டேன். அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன். பின்னர் உங்கள் கையை தொடலாமா என்று கேட்டேன். அவரும் சிரித்தபடியே கை கொடுத்தார், கேமராவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார். அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூற ரொம்ப நன்றிமா கண்டிப்பா சாப்பிட்டுப் போங்க என்றார். என் கனவு நிறைவேறிவிட்டதே என சரண்யா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url