தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. மாநில அரசு மீது நடவடிக்கை எடுங்க.. ஆளுநருக்கு கமல் கோரிக்கை

சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டுக்கு சுப்ரீம் கோர்ட் ரூ. 100 கோடி அபராதம் விதித்துள்ளதாக ஆளுநருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை சீர்குலைந்துவிட்டது. மாநில அரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விதிகளை அப்பட்டமாக மீறி செயல்பட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை. சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டுக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.100 கோடி அபராதம் விதித்தது.

துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?. எந்தெந்த இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?. எந்தெந்த ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்த உத்தரவிடப்பட்டது?.

இந்த துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?. எத்தனை பேர் காயமடைந்தனர்?. இரண்டாவது நாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தகவல்கள் என்னென்ன?. இறுதியாக எந்த இடங்களில் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? என்பன உள்ளிட்ட கேள்விகளை கமல் எழுப்பியுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url