எவன் பார்க்குற வேலை என்றே தெரியலையே: அதிர்ச்சியில் விஜய் 62 படக்குழு

விஜய் 62 படத்தின் முக்கிய காட்சி வீடியோ கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஜய் 62. சினிமா ஸ்டிரைக் முடிந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.


விஜய் இளைஞர்களுடன் சேர்ந்து பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சியை சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகே இரவில் படமாக்கப்பட்டது. அந்த காட்சி வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விஜய் பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சி படத்தில் வரும் மிக முக்கியமான காட்சி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காட்சி கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

முன்பும் கூட விஜய் நடித்த முக்கிய சண்டை காட்சி வீடியோ லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடு விதித்தும் மீண்டும் ஒரு காட்சி கசிந்துள்ளது.

விஜய் 62 படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய், முருகதாஸ் மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள படம் விஜய் 62 என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url