ஜூன் 22-ம் தேதி ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப் போகிறாரா விஜய்?


ஆண்டுதோறும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அன்று விஜய் ரசிகர்கள் திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் சமீப ஆண்டுகளாக விஜய்யின் பிறந்த நாள் விழா அடக்கியே வாசிக்கப்படுகிறது. அவரும் அன்றைய நாளில் ஏதாவது படப்பிடிப்பில் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

ஆனால் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாள் அப்படி இருக்காது என்கிறார்கள். ஜூன் 22 அன்று விஜய் புதிய முடிவை அறிவிக்கப் போகிறார் என்று கூறி மதுரை நகரெங்கும் போஸ்டர்களை அடித்து தெறிக்க விட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். தின விஜய் என்ற பெயரில் ஒரு செய்தித் தாளின் முதல் பக்கம் போல வடிவமைத்த போஸ்டரில், "தன் நீண்ட நாள் மௌனம் கலைக்கிறார் விஜய்... தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம்' என்று தலைப்புச் செய்தி போல அச்சிட்டுள்ளனர். அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து விஜய் அன்றைய தினம் அறிவிக்கப் போவதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். விஜய்யின் மதுரை வடக்கு மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் இந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரஜினியும் கமலும் அரசியல் பிரவேசத்தை தொடங்கிவிட்டனர். விஜய் எப்போது அரசியல் பயணம் ஆரம்பிப்பார் என்று சில தினங்களுக்கு முன் எஸ் ஏ சந்திரசேகரனிடம் கேட்டபோது, "இப்போதுள்ள சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்தால் மக்களுக்கே போரடித்துவிடும்," என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url