தமிழக மக்களுக்கு மாசுக்கட்டுவாரியம் நம்பிக்கை துரோகம்- கமல் ட்வீட்

சென்னை: காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம் என மநீம தலைவர் கமல் கூறியுள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு'' என்று கமல் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றில் நீர் அதிக மாசடைந்துள்ளதாகவும், அதை குடிநீருக்கும் பாசனத்திற்கும் பயன்படுத்த முடியாது எனவும் ஆய்வறிக்கை ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியானது. இதனால், ஆற்றுநீரை முறையாக பராமரிக்காத மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காவிரி படுகையில் உரிமம் பெறாமல் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழ வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url