'குட்டி தளபதி'க்கு மிகவும் பிடித்த படம் எது தெரியுமா?

விஜய் மகனுக்கு எந்த படம் மிகவும் பிடித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்திருந்தது. படம் பார்த்த பிறகு சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும்போது எல்லாம் ஃபஹத் ஃபாசில் பேசிய வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

வேலைக்காரன் படம் பார்த்த பிறகு சூப்பர் மார்க்கெட்டுகளில் பள, பளவென்று இருக்கும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கும்போது விஷத்தை காசு கொடுத்து வாங்குகிறோமோ என்ற பயம் தலை தூக்குகிறது.

குழந்தைகள் பில் போடும் இடத்திற்கு அருகில் குழந்தைகளை கவர வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்த்தாலும் வேலைக்காரன் படம் தான் நினைவுக்கு வருகிறது. வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்டு பொருட்களை வாங்க வேண்டி உள்ளது.

மோகன்ராஜா விஜய்யை சந்தித்துள்ளார். அப்போது விஜய் வேலைக்காரன் படத்தை பாராட்டியதுடன் தன்னை விட தன் மகன் சஞ்சய்க்கு தான் அந்த படம் மிகவும் பிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

விஜய்யின் மகன் வளர்ந்துவிட்டார். தந்தையை போன்று நடிக்க வருகிறாரா இல்லை படித்துவிட்டு படிப்புக்கு ஏற்றது போன்று வேலைக்கு போகப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url