கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது- கமல் பேச்சு

சென்னை: கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்தி வருவதாகவும் மாணவர்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் கமல். இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சம் பேர் வரை சேர்ந்துள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வந்த மாணவர்களை வரவேற்றார் நடிகர் கமல். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் பேசுகையில், எதிர்காலத்தை மாணவர்கள் மாற்ற முயல வேண்டும்.



மாற்றத்தை கொண்டு வருவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கடமை. நீங்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். விமர்சிப்பது நம் உரிமை.
மாணவர்களை பார்த்து தலைவா என்று நான் கூறும் நிலை வரவேண்டும். யார் வீழ்ந்தாலும் தமிழகம் எழுந்தே தீரும். தமிழகம் எழுவதற்கு மாணவர்கள் தொண்டு செய்ய வேண்டும்.


அழகிய குடும்பத்தில் உறுப்பினராக சேர்ந்து இருக்கிறீர்கள். இந்த குடும்பத்தை மேலும் அழகாக்கி இருக்கிறார்கள். என் எண்ணம் உங்கள் எண்ணமாக உருவாக வேண்டும். நீங்கள்தான் என் பேச்சு, தமிழகம்தான் என் மூச்சு

தவறு செய்வது மனித இயல்பு, ஆனால் அதை திருத்தி கொண்டு கடமையாற்ற வேண்டும். மக்களுக்கு தொண்டு செய்யாமல் யாரும் தலைவனாக முடியாது. டாஸ்மாக்கை உடனடியாக நிறுத்த முடியாது, அதை முறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கை ஒழித்து விட்டால் கள்ளச்சாராயத்தை தேடி சென்றுவிடுவார்கள் என்றார் அவர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url