நீலாங்கரை வீட்டை காலி செய்துவிட்டு காரை மாற்றிய விஜய்: எல்லாம்...

விஜய் தனது நீலாங்கரை வீட்டை காலி செய்துள்ளாராம்.

விஜய் தனது குடும்பத்தாருடன் சென்னை நீலாங்கரையில் வசித்து வந்தார். அந்த வீட்டை இடித்துவிட்டு பெரிதாக கட்டுமாறு குடும்பத்தார் விஜய்யிடம் தெரிவித்தார்களாம்.

இதையடுத்து விஜய் நீலாங்கரை வீட்டை காலி செய்துள்ளார்.
நீலாங்கரை வீட்டை காலி செய்த விஜய் தற்போது குடும்பத்தாருடன் பனையூரில் ஒரு வீட்டில் குடியேறியுள்ளாராம். நீலாங்கரை வீட்டை இடித்துவிட்டு பிரமாண்டமாக வீடு கட்டுகிறாராம்.
விஜய் முன்பெல்லாம் மாருதி ஸ்விப்ட் காரில் தான் சென்னையை வலம் வருவார். ஆனால் தற்போது மாருதியை விட்டுவிட்டு இன்னோவா காருக்கு மாறிவிட்டாராம்.

குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடு, காரை விஜய் மாற்றியதாக கூறப்படுகிறது. விஜய்யின் மகள் பாடுவதில் ஆர்வம் காட்டுவதுடன் பேட்மிண்டனும் சிறப்பாக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மகன் சஞ்சய் வளர்ந்துவிட்டார். ஆனால் அவர் அப்பா வழியில் நடிகர் ஆவாரா என்று தெரியவில்லை. பிள்ளைகளின் விருப்பமே தன் விருப்பம் என்று கூறி வருகிறார் விஜய்.Next Post Previous Post
No Comment
Add Comment
comment url