ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சினேகன் - மக்கள் நீதி மய்யம் பேச்சாளர் லிஸ்ட் ரிலீஸ்

நடிகை ஸ்ரீப்ரியா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், கமீலா நாசர், கவிஞர் சினேகன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 21தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.



வெள்ளை நிறத்தில் சிவப்பு வெள்ளை இணைந்த ஆறு கைகள் நடுவில் கறுப்பில் நட்சத்திரம் சின்னம் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தி ஏற்றி வைத்தார். நிர்வாகிகளையும் அறிவித்தார். கமல் கட்சியில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, உறுப்பினர்கள் சேர்க்கைக்காக மய்யம்.காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி இருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே மய்யம்.காம் இணையதளம் மூலம் 2,01,597 பேர் உறுப்பினராக சேருவதற்கு பதிவு செய்திருப்பதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url