கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நலம் விசாரித்தார் கமல்

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை விருந்தினர் மாளிகையில் சந்தித்து நலம் விசாரித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் வழக்கமாக செய்துகொள்ளும் சோதனைகள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் அவருக்கு இன்று மதியம் மருத்துவமனையில் சிகிச்சைகள் எடுத்து முடிக்கப்பட்டவுடன் அவர் கேரள விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு அவரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பினராயி விஜயன் செவாலியே விருது பெற்ற கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் கமல் கட்சி தொடங்கியபோதும் நேரில் வர இயலாததை கூறி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். கேரள முதல்வருடன் கமலுக்கு நல்ல பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url