'விஜய் 62' படத்தின் ஹீரோயின் இவர்தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : நடிகர் விஜய் - இயக்குநர் முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக விஜய்யின் 62-வது படம் மூலம் இணைகிறார்கள். இவர்கள் சேர்ந்து எடுத்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்கள் மாஸ் ஹிட்டானதை தொடர்ந்து இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



விஜய்யின் 62-வது படமான இதனை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்பட்டது. படத்தில் காமெடியனாக யோகி பாபு நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது இந்தத் தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்‌சர்ஸ் உறுதி செய்துள்ளது. 'பைரவா' படத்தை அடுத்து மீண்டும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

'விஜய் 62' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url