தீர்ப்பு வந்த கையோடு, வைரலாகும் 2ஜி பற்றி விஜய் பேசிய டயலாக்!

வைரலாகும் 2ஜி பற்றி விஜய் பேசிய டயலாக்!-வீடியோ சென்னை: 2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரும் விடுதலையான நிலையில், விஜய் நடித்த ஒரு திரைப்பட டயலாக் இப்போது வைரலாக சுற்றி வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி இழப்பு என முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

செல்வாக்கை சரித்தது ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 6 வருடங்களாகவே திமுக மீது 2ஜி ஊழல் கறை சுமத்தப்பட்டே வந்தது. இதனால் தேர்தலில் அக்கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு சரிந்தது என்றும் சொல்ல முடியும்.

விஜய் டயலாக் இந்த நிலையில்தான், கத்தி என்ற திரைப்படத்தில், நடிகர் விஜய், 2ஜி என்பது ஊழல் என டயலாக் பேசியிருந்தார். "2ஜின்னா என்ன.. அலைக்கற்றை.. வெறும் காற்றை வைத்து கோடி கோடியாக ஊழல் செய்யும் ஊருய்யா இது" என படத்தில் நிருபர்களிடம் தீவிர கதியில் டயலாக் பேசி அப்ளாஸ் வாங்கியிருப்பார் விஜய்.


ஜெயா டிவி வாங்கியது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, இது ஊழல் இல்லை, வருவாய் இழப்பு என காங்கிரசை சேர்ந்த சில தலைவர்கள் கூறி வந்த நிலையில், திமுகவுக்கு இந்த வழக்கு பெரும் பின்னடைவாக இருந்த நிலையில், விஜய் இவ்வாறு பேசிய டயலாக் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெயா டிவி கத்தி திரைப்பட உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு, அவ்வப்போது இப்படத்தை ஒளிபரப்பி, திமுகவை சீண்டி வந்தது

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url