முன்னேற்றம்தான் கமலின் அரசியல் நோக்கம்.. கலாம் பேரன் பேட்டி!

அரசியல் வானில் எம்ஜிஆரைப் அழிக்க முடியாத சூரியனாக மாறுவாரா கமல் ? சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் மக்கள் முன்னேற்றத்தை சார்ந்தது என்று அப்துல் கலாம் பேரன் ஷேக் தாவுத் பேட்டி அளித்து இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.


ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார். இதுகுறித்து கமல் டிவிட் செய்துள்ளார். அதில் ''பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்.'' என்றுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url