Type Here to Get Search Results !

கமல்ஹாசனுக்கான "அரசியல் விதை" இதுதான்!

கமலின் அரசியல் ஆரம்பம் இதுதான்-வீடியோ சென்னை: காதல் இளவரசன், கலைஞானி, உலக நாயகன் என்று பல்வேறு பெயர்களால் பல்வேறு கால கட்டத்தில் அழைக்கப்பட்ட கமல்ஹாசன் நாளை முதல் அரசியலில் புகுகிறார். புதிய கட்சி தொடங்கப் போகும் கமல்ஹாசன் இதற்கு முன்பு எந்தக் கட்டத்திலும் அரசியலில் நுழைவேன் என்று குறிப்பால் கூட உணர்த்தியதில்லை. மாறாக அரசியலை விட்டு விலகியே இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கமல்ஹாசன் அரசியல் பேச ஆரம்பித்தார். அதிரடியாக இறங்கவும் ஆரம்பித்தார். இதோ நாளை முறைப்படி கட்சியை அறிவிக்கிறார். எல்லாமே ஒரு வேகத்தில் நடந்தேறி வருகின்றன.


இந்த நேரத்தில் ஒரு படம் நமக்கு நினைவுக்கு வந்தது. உன்னால் முடியும் தம்பி. கிட்டத்தட்ட இப்போது நாம் பார்க்கும் கமல்ஹாசனை அப்படத்தில் கே.பாலச்சந்தர் சித்தரித்திருப்பார். இப்போது கமல் செய்ய நினைப்பதையெல்லாம் அந்தப் படத்தில் வரும் கமல் கேரக்டர் செய்யும். புரட்சி பேசும். அதற்கு முன்பும் பின்பும் கூட பல படங்களில் புரட்சி பேசியவர்தான் கமல். ஆனால் இப்போதைய கமலுக்கு மிகப் பொருத்தமான படம் இந்த உன்னால் முடியம் தம்பிதான். படத்தின் கதை, வசனம், காட்சியமைப்புகள், அது பேசிய விஷயங்கள் எல்லாவற்றையும் இப்போது பொருத்திப் பார்த்தால் அது புரியும். அப்படம் பேசிய அரசியல் அப்போது பரபரப்பையும் ஏற்படுத்தியது. கமல் மீதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதை கமல் அரசியலாக்காமல், தனக்கு சாதகமாக பயன்படுத்தாமல் விட்டு விட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad