சென்னை சமையல் சிலிண்டர், சர்க்கரை விலை உயர்வு - இன்று முதல் அமல்





சென்னை: மானிய சமையல் சிலிண்டர் விலை ரூ.4.58 உயர்ந்து ரூ.483.69 ஆக இன்று முதல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டர் மற்றும் சர்க்கரை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டரின் விலை நவம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமையான இன்று முதல் ரூ.93.50  அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்காக பதிவு செய்வோருக்கு ரூ.750க்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேலும் மானியத்துடன் கூடிய எரிவாயு உருளையின் விலை ரூ.479.11லிருந்து ரூ.483.69ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.4.58 அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கு மானியம் அல்லாத சிலிண்டர் நவம்பர் 1ம் தேதி புதன்கிழமையான இன்று முதல் பதிவு செய்து ரூ.750க்கு வாங்குவோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.266.31 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்ததாக, ரேஷன் கடைகளில் நவம்பர் 1ம் தேதி புதன்கிழமையான இன்று முதல் சர்க்கரை விலை உயர்த்தப்படுகிறது. அதாவது ஒரு கிலோ சர்க்கரை ரூ.25 விற்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோ ரூ.13.50க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் ரூ.13.50க்கு விற்கப்பட்ட சர்க்கரையின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி புதன்கிழமையான இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url