கரூரில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை




கரூர்: கரூரில் இன்று நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களை பங்கேற்க வைக்கவே தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து செல்ல கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் சேலம் கூட்டத்திற்கு மாணவர்களை அழைத்து வந்தது போல, கரூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் சீருடை இல்லாமல், வழக்கமான உடையில் அழைத்து வர அம்மாவட்ட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே கரூர் வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கரூர் நகரில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வேக தடைகள் அகற்றப்பட்டுள்ளது. 3000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url