Type Here to Get Search Results !

உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சியை கண்டுபிடித்ததற்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு





ஸ்டாக்ஹோம்: உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சியை கண்டுபிடித்ததற்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசை இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2017ம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் பரிசு பெறுபவர் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளியான அறிவிப்பில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஜெப்ரி சி.ஹால் (72), மைக்கேல் ரோஸ்பாஷ் (73) மற்றும் மைக்கேல் டபிள்யூ. யாங் (68) ஆகிய அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் ரூ.7.2 கோடி பரிசு தொகையை பகிர்ந்து ெகாள்வார்கள்.

உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பூமியின் பரிணாம வளர்ச்சிக்கேற்பவும், பருவநிலை மற்றும் வெப்பத்தால் உண்டாகும் சக்தி இழப்பை ஈடு செய்யவும் மனிதர்கள், விலங்கினம், தாவரங்கள் உள்பட அனைத்து உயிரினங்களிலும் இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்து, தேவையான புரதச்சத்தை ஈட்டித்தரும் மரபணு பற்றிய ஆய்வை வெற்றிகரமாக நடத்தியதற்காக  இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் உள்பட அனைத்து உயிரினங்களும் 24 மணி நேரமும் எப்படி இயங்குகிறது என்பதை 3 பேரும் தங்கள் ஆய்வின் மூலம் தெளிவாக விளக்கி உள்ளனர். பூமியில் வாழும் நமது வாழ்க்கை, கிரகத்தின் இயக்கத்தை பொறுத்தே அமைகிறது.

பல ஆண்டுகளாகவே மனிதன் உள்பட பல்வேறு உயிரினங்களின் 24 மணி நேர இயக்கம் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி நடந்தது. தற்போது உயிர்க் கடிகாரம் என்ற அமைப்பு மூலம் உயிரினங்களின் 24 மணி நேர இயக்கத்தை அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 


ஹார்மோன் அளவு, தூக்கம், உடல் வெப்பம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை உயிர்க் கடிகாரம் கண்காணித்து வழி நடத்துகிறது. புவியின் இயக்கத்திற்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த உயிர்க்கடிகாரம் செயல்படுகிறது என்பதை ஆய்வின் மூலம் 3 பேரும் நிரூபித்துள்ளனர். மரபணு மூலம் நமது உடல் செல்களின் இயக்கம் இரவில் செயல்படுத்தப்படுகிறது. அதே சமயம் பகலில் தானாகவே இயக்கம் நடக்கிறது. ஒவ்வொரு செல்லிலும் உடல் இயக்கத்திற்கான சுய கடிகார முறை உள்ளது என்று அவர்கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர். மருத்துவ துறைக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது.

* 2016ல் மருத்துவத்துக்கான நோபல் விருது ஜப்பானைச் சேர்ந்த செல் உயிரியலாளர் யோஷினோரி ஒஷுமிக்குக் (71) கிடைத்தது.

* உடலில் செல்கள் பிளவுறுவதைப் பற்றியும், அவை எப்படித் தங்கள் உட்கூறுகளை மறுசுழற்சி செய்துகொள்கின்றன என்பதைப் பற்றியும் நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

* அவரது இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad