Type Here to Get Search Results !

நடிகர் விஜயின் மெர்சல் படம் 2 நாட்களில் ரூ.70 கோடி வசூல் செய்து சாதனை






சென்னை, 

நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 700 தியேட்டர்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டது.  ஒரே காம்ப்ளக்ஸ் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டது அங்கு கூட்டம் அலைமோதியது.

விஜய்யின் முந்தைய படங்களை விட மெர்சல் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22 முதல் ரூ.24 கோடி வரை வசூலித்து இருப்பதாக வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஜினியின் கபாலி பட முதல் நாள் வசூல் சாதனையையும், விஜய்யின் ‘தெறி’ பட முதல் நாள் வசூல் சாதனையையும் ‘மெர்சல்’ முறியடித்துள்ளது. முந்தைய படங்கள் அதிக காட்சிகளில் ஓடின. ஆனால் மெர்சல் படம் விசேஷ காட்சி இல்லாமலேயே வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ படம் ரசிகர்களுக்காக பிரத்யேகமாகவும் திரையிடப்பட்டது. இதன் மூலமும் வசூல் குவிந்தது. ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. மெர்சல் பட வசூல் எதிர்பார்த்ததை விட திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

முதல் நாளில், மெர்சல் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 47.1 கோடி ரூபாய் வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும்  14.1 கோடி ரூபாய் விநியோகஸ்தர்களின் பங்குடன் ரூ.24.8 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.

கபாலி முதல் நாள் வசூலாக ரூ.21.5 கோடியும் , விவேகம் முதல்நாள் வசூலாக 16.25 கோடியும், வேதாளம் ரூ.15.5 கோடியும், தெறி ரூ.13.1 கோடியும், லிங்கா ரூ.12.8 கோடியும், கத்தி ரூ.12.5 கோடியும் வசூல் செய்து உள்ளது.

வெளிநாட்டு மையங்களில், மெர்சல் அமெரிக்கா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நன்றாக வசூல் செய்து உள்ளது.

மெர்சல் தயாரிப்பு நிறுவனம் 156 கோடி ரூபாய்க்கு திரையரங்கு, ஆடியோ மற்றும் இதர உரிமைகளை விற்பனை செய்துள்ளது. தமிழக திரையரங்கு உரிமைகள் 70 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.

மெர்சல் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக ரூ24.8 கோடியும், கேரளாவில் ரூ.4.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.5 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ.60 லட்சமும், இந்தியா முழுவதும் ரூ. 34.9 கோடியும் வசூல் செய்து உள்ளது.

இந்தியாவுக்கு வெளியே வட அமெரிக்காவில் ரூ. 3.2 கோடியும்,  மற்ற நாடுகளில் ரூ. 9 கோடியும்,  மொத்தம்  உலக அளவில் 47.1 கோடி வசூலாகி உள்ளது.

மேலே வழங்கப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்  பல்வேறு அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டவை, அது 100 சதவிகித துல்லியமானதாக இருக்காது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad