சம்பளம், 10 மடங்கு உயர்வு!






‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். இவருடைய  பூர்வீகம் மதுரை என்றாலும், வளர்ந்தது, படித்தது எல்லாமே துபாயில். முதல் படத்தில் இவர் வாங்கிய சம்பளம், ரூ.5 லட்சம். நிவேதா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், ‘பொதுவாக எம்மனசு தங்கம்.’

இப்போது அவர் தனது சம்பளத்தை 10 மடங்கு உயர்த்தி விட்டார். ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு அவருடைய சம்பளம், ரூ.50 லட்சம் என்கிறார்கள்!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url