Type Here to Get Search Results !

ஆர்டர் செய்தால் வீடுதேடி வரும் விரைவில் ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை





புதுடெல்லி: பெட்ரோல், டீசல்  விரைவில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

 பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் நேற்று கூறுகையில், ‘‘பெட்ரோலிய பொருட்கள் அனைத்தும் ஆன்லைனில் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை நாங்கள் வாங்கி விட்டோம். ஏற்கெனவே இந்த யோசனையை நான் முன்வைத்தபோது, நடைமுறையில் இது எப்படி சாத்தியமாகும் என்று சிலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால் தற்போது இது நிஜமாகவே நடைமுறையில் வரப்போகிறது’’ என்றார்.
 டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

 இதற்கேற்ப டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் பெட்ரோலிய துறையில் விற்பனையை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் யோசனையை கடந்த ஏப்ரல் மாதம் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்வைத்தார்.
 டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பெட்ரோல், டீசலை ஆர்டர் செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும். பங்க்குகளில் வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டிய சிரமம் இருக்காது. புதிய திட்டத்தின்படி ஆன்லைனில் ஆர்டர் செய்து பணம் செலுத்திவிட்டால், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனமே வீட்டுக்கு சப்ளை செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டது.

   பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்ப தினமும் சுமார் 3.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு ரூ.2,500 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது ஆன்லைனில் விற்பனை செய்யும்போது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான சலுகைகளும் வழங்க முடியும் பெட்ரோலிய நிறுவன வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இன்னும் இரண்டு மாதங்களில் டீசலை வீட்டுக்கே டெலிவரி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கடந்த மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்று தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதன் மூலம், விரைவில் இந்த திட்டம் அமலாவதற்கான வாய்ப்புகள் உள்ளது உறுதியாகியுள்ளது.  எண்ணெய் நிறுவனங்களே நேரடியாக வீட்டுக்கு பெட்ரோல், டீசலை சப்ளை செய்தால் பங்க்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad