வேலூரில் புகார் அளிக்க வந்த மூதாட்டியை இழிவாக பேசிய காவல்துறை : காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மூதாட்டியின் புகாரை வாங்க மறுத்து இழிவாக பேசியதால் காவல் நிலையம் முன்பு மூதாட்டி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி என்பவர் தனது வீட்டின் அருகே உள்ளவரிடம் ஏற்பட்ட வாய் தகராறு குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்க வந்துள்ளார். மூதாட்டியின் புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் அவரை இழிவாக பேசி விரட்டியுள்ளனர்.
இதனால் தன்னை அவமானம்படுத்தியதற்கு நியாயம் கேட்டு காவல் நிலைய வாசலில் கருப்பாயி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் நிலைய வாசலிலேயே மூதாட்டி ஒருவர் தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.