காதலர்களாக இருந்து பிசினஸ் பார்ட்னர்களாகும் வீராட் கோலி - அனுஷ்கா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காதல் ஜோடி மிகவும் பிரபலம். கலை நிகழ்ச்சிகள் விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாகத்தான் சுற்றிவருகிறார்கள்.
கடந்த 2013ல் ஷாம்பு விளம்பரத்தில் கோலி , அனுஷ்கா சேர்ந்து நடித்தனர். இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்களின்போது விராட் கோலியுடன் அனுஷ்காவும் அவ்வப்போது வெளிநாடும் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இருவரும் இணைந்து ஓட்டல் ஒன்றை திறக்க உள்ளனர். இதற்காக மும்பை மற்றும் டெல்லியில் முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இதுவரை காதலர்களாக இருந்த இருவரும் தற்போது வர்த்தக கூட்டாளிகளாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.