மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அநாகரீக பேச்சிற்காக சர்ச்சையில் சிக்குபவர் என்றால் அது காயத்ரியாகத் தான் இருக்கும். சக போட்டியாளரான ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார். அடுத்தது பரணி வெளியேற்றப்பட்ட போது பரணியை விட கஞ்சா கருப்பு கேவலமானவரா என்று ஓவியாவிடம் வரிந்து கட்டி சண்டைபோட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் உண்மையாக நடந்து கொண்டால் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுவார்கள். இந்நிலையில் அவர் வெளியில் வந்த பின் சமூக வலைதளங்களில் அவரை சரமாரியாக திட்டி தீர்த்தனர்.
ஆனால் தவறாக நடந்து கொண்டால் ரசிகர்கள் எப்படி தங்களது வெறுப்பை வெளிப்படுத்துவார்கள் என்பதை சொல்லவே முடியாது. இது குறித்து காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுடைய மோசமான விமர்சனங்களை நான் அழிக்க மாட்டேன். என்னுடைய முகமூடியை கழட்டி என் உண்மை முகத்தை காட்டிவிட்டேன். உங்களுடைய முகமூடியை கழட்டி உங்களுடைய மோசமான விஷயங்களை கவனியுங்கள் என டுவிட் செய்துள்ளார்.