கட்டுமஸ்து ராணா திமுசு கட்ட சன்னி மீட்டிங்
தலைப்பை படித்தவுடன் வேறு கற்பனைக்கு போய்விடாதீர்கள். கிரிக்கெட் பைத்தியமாக இருந்த நட்சத்திரங்கள் கடந்த ஒரு வருடமாக கபடி விளையாட்டு பக்கம் கவனத்தை திருப்பி இருக்கின்றனர். இதனால் இப்போட்டி ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் கபடி விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். தற்போது கபடி போட்டிக்கு கவர்ச்சி பூச்சு பூசப்பட்டிருக்கிறது. ஒரு அணிக்கு கட்டுமஸ்து உடற்கட்டுக்காரர் ராணாவும் மறுபக்கம் திமுசுகட்ட சன்னி லியோனும் நின்று மோதலுக்கு தயாராகி உள்ளனர். இதற்கான போட்டிகள் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. மும்பை, பெங்களூரில் நடக்க உள்ளது.