ஆரவ்வை இன்னும் காதலிக்கிறாரா ஓவியா?
என்மேல் இவ்வளவு பேர் அன்பு வைக்கும் போது, நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும் என்று பிக்பாஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான குணங்களால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் ஓவியா. சமூக வலைதளங்களில் இவருக்கு ஒரு ஆர்மியே உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மக்கள் மத்தியில் தனக்கு உள்ள வரவேற்பைப் புரிந்து கொண்டார். அதற்கேற்ப இணையதளங்களில் புகைப்படங்கள், வீடியோ என அவ்வப்போது பதிவிட்டு கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா தான் திறந்து வைக்க சென்றார். அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது. கடையை திறந்து வைத்த பிறகு மக்கள் மத்தியில் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். கொக்கு நெட்டக் கொக்கு என்று பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் பிக்பாஸ் 100-வது நாளில் நான் இருப்பேன் என்று தெரிவித்தார்.