Type Here to Get Search Results !

பிளேபாய் இதழின் நிறுவனர் ஹெஃப்னர் 91 வயதில் காலமானார்






வாலிப வயதினரைக் கவர்ந்த பிளேபாய் இதழின் நிறுவனர், ஹியூ ஹெஃப்னர், 91 வயதில் காலமானார்.

இயற்கைக் காரணங்களால், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இல்லத்தில் அவர் அமைதியாக உயிர் பிரிந்ததாக, பிளேபாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1953இல், ஹெஃப்னர் , பிளேபாய் இதழை தனது இல்லத்தில் இருந்து வெளியிடத் துவங்கினார். மாதம் 70 இலட்சம் பிரதிகளை விற்று, உலகிலேயே அதிக விற்பனையாகும் ஆண்களுக்கான இதழாக அது மாறியது.

"அவரின் பிரிவால் பலரும் வாடுவார்கள்" என அவரின் மகன் கூப்பர் ஹெஃப்னர் தெரிவித்தார்.

"விதி விலக்காகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கையை, ஒரு ஊடகவியலாளராகவும், கலாச்சார முன்னோடியாகவும்" வாழ்ந்த தனது தந்தைக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். மேலும், பேச்சுரிமை, சிவில் உரிமைகள் மற்றும் பாலியல் சுத்திரம் ஆகியவற்றிற்காகக் குரல் கொடுத்தவர் அவர் என்றும் கூப்பர் குறிப்பிட்டார்.

கருத்தடை சாதனங்களை சட்டரீதியாகவே தடை செய்யக்கூடிய சூழல் அமெரிக்காவில் இருந்த காலகட்டத்தில், இவரின் இதழ், நிர்வாணத்தின் மீது, ஒரு மரியாதையை உருவாக்கியது.

கோடீஸ்வரர்

அது அவரை கோடீஸ்வராகவும், பல சூதாட்ட கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகளுக்கு உரிமையாளராகவும் ஆக்கியது.

ப்ளே பாயின் முதல் இதழில் மாரிலின் மன்றோவின் நிர்வாணப் படம் வெளியானது. 1949 காலண்டர் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட அந்தப் படத்தை அவர் 200 டாலருக்கு வாங்கினார்.



பட்டு பைஜாமா அணியும் இவர், தமது இன்ப நாட்டத்தாலும், பிளேபாய் பெண் மாடல்களை காதலிப்பதிலும் பிரபலமானவர். தாம் 1000 பெண்களுடன் 'உறங்கியிருப்பதாக' கூறிக்கொண்டவர்.

சிக்காக்கோ மாகாணத்தில், மிகவும் கண்டிப்பான மெத்தடிஸ்ட் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர் ஹியூ ஹெஃப்னர்.

தனது இதழில் குறிப்பிடப்படும் வாழ்க்கையையே , ஹெஃப்னர் வாழ்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது பெரிய இல்லத்தில், இளம் பெண்கள் சூழ அவர் வாழ்ந்தார். பெண்களைப் பாலியல் பண்டங்களாக சுருக்கியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

2005 முதல் 2010 ஆண்டு வரை, இவரை வாழ்க்கை முறை மற்றும் அதைப் பகிரந்துகொண்ட பெண்கள் குறித்த தகவல்கள் `தி கேள் நெக்ஸ்டு டோர்` என்னும் சின்னத்திரை நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.

2012 ஆம் ஆண்டு, தனது 86 வயதில் அவர், தன்னைவிட 60 வயது குறைவான, கிரிஸ்டல் ஹாரில் என்னும் மாடலை மணந்தார்.
விமர்சகர்கள் இவரின் இதழை, ஒழுக்கக்கேடானது என்று கூறியபோதும், அந்த கருத்தை ஏற்க அவர் மறுத்தார்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், பீட்டில் குழுவின் ஜான் லென்னான் மற்றும் கியூப தலைவர் பிடல் காஸ்ரோ ஆகியோரின் நேர்க்காணல்களும் இந்த இதழில் வெளியாகியுள்ளது.

2002 ஆம் ஆண்டு, சி.என்.என்னுக்கு அளித்த பேட்டியில், `நான் எப்போதுமே பிளேபாய் இதழை பாலியல் தொடர்பான ஒன்றாக பார்த்தது இல்லை. வாழ்க்கைமுறை இதழான இதில், பாலியல் தொடர்பான விஷயங்கள் முக்கிய இடம் பெற்று இருக்கும்`.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad