உலக பொருளாதார பட்டியலில் இந்தியாவிற்கு 40-வது இடம்





உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 39-வது இடத்தில் இருந்தது. இந்த முறை 40-வது இடத்தை பிடித்து ஒரு இடம் பின் தங்கி உள்ளது.

உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அறிக்கையின் படி 137 பொருளாதார நாடுகளில் இந்தியா 40-வது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்து முதல் இடத்திலும் , அமெரிக்கா இரண்டாம் இடத்திலும்,  சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது.  சீனா (27 வது இடத்திலும்)  ரஷ்யா (38 வது இடத்திலும்) உள்ளது.  தென் ஆப்ரிக்கா 61-வது இடத்திலும், பிரேசில் 80-வது இடத்திலும், பூட்டான் 85-வது இடத்திலும் இலங்கை 86-வது இடத்திலும், நேபாளம் 88-வது இடத்திலும் வங்காள தேசம் 99-வது இடத்திலும் பாகிஸ்தான் 115-வது இடத்திலும் உள்ளன.

தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஊழல் தான் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url