ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா? ஆச்சரியத்தில் கோலிவுட்




சென்னை : அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படத்தின் வியாபாரம் மற்றும் முன்பதிவு குறித்த செய்திகள் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளதாம். ‘பாகுபலி 2’ படத்திற்கு பின்னர் நடைபெறும் பிரமாண்டமான வியாபாரம் என்று கூறப்படுகிறது.

விநியோகிஸ்தர்கள் சற்றுமுன் அளிதுள்ள தகவலின்படி ‘விவேகம்’ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.120 வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை காசி திரையரங்கில் இரண்டரை மணி நேரத்தில் நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை ஆகியுள்ளதாகவும், அபிராமி திரையரங்கில் ஒரே இரவில் 15000 டிக்கெட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாகயும் செய்திகள் கிடைத்துள்ளது.

இந்த தகவல்களை வைத்து பார்க்கும்போது ‘விவேகம்’ திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url