வெளியானது 'விவேகம்': சென்னையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!!!
சென்னை : வீரம், வேதாளம், திரைப்படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விவேகம். 110 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த திரைப்படம் தமிழகத்தில் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இன்று அதிகாலை சிறப்பு காட்சி வெளியாகிவுள்ளது.
மேலும் கள்ளச்சந்தையிலும் விவேகம் டிக்கெட் விற்கப்படும் நிலை உள்ளது. டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தாலும், தங்கள் ஆதர்ச நடிகரின் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிக விலைக்கு ரசிகர்கள் டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர்.
அதேநேரம், திரையுலகில் ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற இமேஜோடு வலம் வரும் நடிகர் அஜித், இதுமாதிரியான முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.