ஐநா தடைகளை கொண்டு வந்தால் “எதிர் நடவடிக்கைகள்” எடுக்கப்படும் - வட கொரியா
வட கொரியா மீது ஐநா சபை மேலும் தடைகளை கொண்டு வந்தால் அவற்றை எதிர் நடவடிக்கைகள் மூலம் சந்திப்போம் என்று கூறியுள்ளது.
சியோல்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக வட கொரியா சோதித்தப் பிறகு அதன் மீது மேற்கொண்டு தடைகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன.
இதையொட்டி வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் கூறுகையில், அமெரிக்காவிடமிருந்து வரக்கூடிய அணு ஆயுதத் தாக்குதலல் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததாகவும்; அது வட கொரியாவின் சட்டப்பூர்வ உரிமை என்றும் கூறினார்.
இதனிடையே அமெரிக்கா ரஷ்யாவையும், சீனாவையும் ஐநா சபையில் வட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கச் செய்ய முயற்சித்து வருகிறது. இரு நாடுகளும் மேற்கொண்டு தடைகளையோ, போரையோ நடத்துவதற்கு பதிலாக வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த யோசனை தெரிவித்துள்ளன. அதற்கு முன் அமெரிக்கா-தென் கொரியா ராணுவ ஒத்திகைகளையு, வட கொரியா தனது ஏவுகணை, அணு வெடிப்பு சோதனைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றன.