நடுவராகிய ஜூலியின் அட்டகாசங்கள்!!!!!

நடிகர் கமல் முன் நின்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மிகவும் வெகுளியாக இருந்த ஜூலி இப்பொழுது மிகவும் மாறிக் கொண்டே வருகிறார்.அவரது நடவடிக்கை மக்களிடமும் அங்கு உள்ள சக நடிகர்களுக்கும் அவர் மீது இப்பொது வெறுப்பு அதிகரித்து கொண்டு வருகிறது.இந்த நிலையில் அவர் இன்றைய நாள் நிகழ்வில் சமையல் போட்டியில் அவர் போட்டியின் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார்.அதில் அவரது நடவடிக்கைகள் சக நடிகர்களை வேதனைப் படுத்துவதாக உள்ளது.
அதிலும் ஆரவை அவர் வேண்டும் என்றே வேதனைப் படுத்துகிறார் என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது.ஏன் என்றால் அவர் ஆரவ் மீது முன்னதாகவே  மிகவும் கோபமாக இருந்தார்.ஏனென்றால் ஆரவிடம் அவர் 'நான் உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன் என செய்யறேன் பாரு' என முன்னதாகவே சபதம் செய்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கு போட்டியிட ஜூலி விரும்புகிறார். அவர் தலைவராக வந்தால் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சமே இருக்காது. இது தானே உங்களுக்கு வேண்டும் பிக் பாஸ்

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url