சொப்பன சுந்தரி! காவ்யா ஷா
ஹிட் அயிட்டம் : ‘வீரசிவாஜி’யில் ‘சொப்பன சுந்தரி’
‘சொப்பன சுந்தரி நான்தானே.... நான் சொப்பன லோகத்தின் தேன்தானே’ என்று ‘வீரசிவாஜி’யின் ஹாட் டான்ஸில் கலக்கிய அயிட்டம் காவ்யா ஷா. ‘‘பொறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூருதான். மாடலிங், டி.வி. தொகுப்பாளர்னு வளர்ந்து சினிமாவில் என்ட்ரி ஆனேன். கன்னடத்துல ‘பைசா’ செம ஹிட் ஆகி, காவ்யா யாருனு இந்த உலகத்துக்கு காண்பிச்சது.
பாலா சார் டைரக்ஷன்ல ‘தாரை தப்பட்டை’ யில் கரகாட்டக்காரியாக நடிச்சிருந்தேன். சின்ன ரோல்தான், பட், பாலா படமாச்சே! ‘வீரசிவாஜி’யில் ‘சொப்பனசுந்தரி’ செம ரீச். அதில் என்னோட டான்ஸ் பேசப்பட்டதில் ரொம்பவே சந்தோஷம்’’ எனச் சொல்லும் காவ்யா, கன்னடத்தில் இப்போது பிஸி.