Type Here to Get Search Results !

தக்காளி விலை திடீரென்று உயர்ந்ததற்கு காரணம்??????

நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தரவின் படி ரிடெய்ல் சந்தையில் தக்காளி விலை ஒரு மாதத்தில் 20 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



தக்காளி அன்றாடச் சமையலுக்குத் தேவையான ஒரு அத்தியாவசிய பொருள், அதன் விலை கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து காணப்படுகின்றது, தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அதிகத் தேவை இருந்து குறைந்தும் அளவு மட்டுமே மகசூல் கிடைத்தது ஒரு காரணம். இங்கு நாம் எதனால் தக்காளி விலை உயர்ந்தது என்பதற்கான 5 காரணங்களைப் பார்ப்போம்

1).விநியோகம் குறைவு; கோடைக்காலத்தில் அதிக நட்டம் ஏற்பட்டதால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பலர் பிற பயிர்கள் மீது கவனம் செலுத்தியதால் உற்பத்தி குறைந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் விலை 90 முதல் 100 ரூபாய் வரை பல சந்தைகளில் தக்காளியின் விலை ஏறியதற்கான முக்கியக் காரணமாகும்.

2).பண மதிப்பு நீக்கம்; நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பண மதிப்பு நீக்கத்தின் தாக்கம் இருந்ததால் விவசாயிகள் குறைந்த விலையில் தகளியை விற்று வந்துள்ளனர்.எனவே கோடைக்காலத்தில் குறைந்த அளவில் தான் தக்காளியைச் சாகுபடி செய்தனர். எனவே தக்காளியை அதிகம் உற்பத்தி செய்யும் மதனப்பள்ளி, கோலார் மற்றும் சங்கம்னர் இடங்களில் மே மாதம் வரை தக்காளியின் விலை ஒற்றை எண் விலையில் தான் விற்கப்பட்டு வந்துள்ளது.

3).விலை குறைந்த போது கண்டுகொள்ளாத நுகர்வோர்; ஜூன் மாத இறுதி வரை நுகர்வோர்கள் தக்காளியின் விலை குறைவாக இருந்து வந்ததனை கவனித்து இருப்பார்கள். அதே நேரம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சாலைகளில் தக்காளியினைக் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதனை செய்திகள் மூலம் நாம் அறிவோம். இப்போது உற்பத்தி குறைந்து ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடுகள் எல்லாம் குறைந்துள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது.

4).ட்டத்தினால் விவசாயிகள் எடுத்த முடிவு; விலை குறைவால் ஏற்பட்ட நட்டத்தினால் பல விவசாயிகள் கோடைக்கால உற்பத்தியின் இரண்டு அறுவடைகளுக்கு அடுத்து மருந்துகள் அடித்துத் தக்காளி செடிகளைப் பாதுகாப்பதினை விவசாயிகள் தவிர்த்துவிட்டனர்.

5).சாகுபடி செய்வதற்கான தக்காளி செடிகளின் விலை; சென்ற ஆண்டினை விட இந்த ஆண்டுத் தக்காளி செடிகளின் விலை 35 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் முன்னணி கலப்பினை காய்கறி விதைகள் சப்ளையர் நிறுவனத்தின் மேலாளர் ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதுவே விலை அதிகமாக இருந்தால் தக்காளி விலை இன்னும் உயரும். சென்ற ஆண்டுத் தற்போதைய விலையினை விடக் கூடுதல் விலையில் தக்காளி செடிகளை விற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad