Type Here to Get Search Results !

ஜியோ-க்கு எதிராக அதிரடி ஆஃபர்களை அள்ளிவீசும் ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஏர்செல்..!


இந்தியா டெலிகாம் பயனர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு எதிராகப் போட்டி நிறுவனங்கள் அதிரடியான பல் அதிட்டங்களை வெளியிட்டுள்ளன.

ஜியோ போன்றே குரல் அழைப்புகள், இணையதளத் தரவு என இந்தத் திட்டங்கள் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. எனவே ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் அன்மையில் அறிவித்துள்ள ஆஃபர்களை உங்களுக்காகத் தொகுத்து வழங்கி உள்ளோம். இதனைப் பார்த்து எது சிறந்த திட்டம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.


1) ஏர்டெல் 549 : ஏர்டெல் நிறுவனத்தின் 549 ரூபாய் திட்டத்தின் மூலமாக 70 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறலாம். ஒரு நாளைக்கு 2.5 ஜிபி வரம்பு உண்டு. 28 நாட்கள் வேலிடிட்டி.

2) ஏர்டெல் 244: ஏர்டெல் நிறுவனத்தின் 244 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் 28 நாட்களுக்கு 28 ஜிபி தரவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. ஆனால் ஒரு நாளைக்கும் 1 ஜிபி இணையதளப் பயன்பாட்டிற்கான வரம்பு உண்டு


3) வோடாபோன் 244: வோடாபோனின் 277 ரூபாய் ரீசார்க் பேக் மூலம் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இணையதள வரம்புடன் 70 நாட்களுக்கு 70 ஜிபி வழங்குகின்றது. இதிலும் அனைத்துக் குரல் அழைப்புகளும் இலவசம் என்றாலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் வழங்கப்படுகின்றது.

4) ஐடியா 347: ஐடியா 347 ரூபாய் ரீசார்ஜ் பேக்கு மூலமாக 28 நாட்களுக்கு தினம் ஒரு ஜிபி வரம்புடன் 28 ஜிபி தரவு பெறமுடியும். இதிலும் அனைத்துக் குரல் அழைப்புகளும் இலவசம்.


5) ஜியோ 399: மற்றும் 309 ஜியோ பிரைம் உறுப்பினர்கள் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 84 நாட்களுக்கு 84 ஜிபி தரவு அளிக்கின்றது. இதுவே 309ப் ரூபாய்க்கு ரீசர்ஜ் செய்யும் போது 56 நாட்களுக்கு 56 ஜிபி தரவு அளிக்கின்றது.


6) ஏர்செல் 348: 348 ரூபாய்க்கு ஏர்செல் பயனர்கள் ரீசார்ஜ் செய்யும் போது 84 நாட்களுக்கு 84 ஜிபி தரவு பெறலாம். ஆனால் 3ஜி நெட்வோர்க் சேவை மட்டுமே கிடைக்கும்.




7) பிஎஸ்என்எல்: 666 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்யும் போது 120 ஜிபி தரவு 60 நாட்களுக்குக் கிடைக்கும். ஆனால் இதுவும் 2ஜி, மற்றும் 3ஜி நெட்வொர்க் சேவை ஆகும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad