சஞ்சனா நிர்வாண வீடியோ? : இயக்குனர் விளக்கம்




ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. இவர் டார்லிங், மரகதநாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. கன்னடம், தெலுங்கு படங்களில் சஞ்சனா நடிக்கிறார். கர்நாடகாவில் கிரிமினல் குற்றவாளி களை பின்னணியாக கொண்ட கதையாக உருவானது தண்டபாளையம். இதன் 2ம் பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் சஞ்சனா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இணைய தளத்தில் ஒரு வீடியோ கிளிப் வெளியானது. அதில் நிர்வாணமாக ஒரு பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை செய்வதுபோல் காட்சி இடம்பெற்றிருந்தது. அக்காட்சி தண்டபாளையம் 2ம் பாகத்திற்காக சஞ்சனாவை போலீஸார் கட்டி வைத்து சித்ரவதை செய்யும் காட்சி என்று பரபரப்பானது.

நிர்வாணமாக சஞ்சனா நடித்திருப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி பட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ராஜூ அளித்துள்ள விளக்கத்தில்,’தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ கிளிப் படத்தில் வரும் காட்சி அல்ல. அதில் தெரியும் பெண்ணும் சஞ்சனா அல்ல. எந்தவொரு நிர்வாண காட்சியும் நான் படமாக்கவில்லை’ என கூறியிருக்கிறார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url