குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்தி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபால்கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும் எதிர்க்கட்சிகள் தரப்பில் மக் களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.
இதேபோல குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உட்பட 18 கட்சிகள் பங்கேற்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபால்கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது. எனினும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு அந்த கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் வேட்பாள ரான கோபால்கிருஷ்ண காந்தி மகாத்மா காந்தி, ராஜகோபாலாச் சாரி ஆகியோரின் பேரன் ஆவார். இவர் மேற்குவங்க ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.
இதுகுறித்து கோபால்கிருஷ்ண காந்தி பிடிஐ செய்தி நிறுவனத் துக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டு என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். அதனை ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.