குடி போதைக்கு பலியான பள்ளி மாணவி: காம கொடூரன் வெறிச்செயல்!



திருப்போரூரை அடுத்த ஆலந்தூரில் பள்ளி மாணவியை குடிபோதையில் வந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.




அசோக் குமார் என்ற 24 வயது வாலிபர் ஒருவர் தனது பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நீண்ட நாட்களாக அந்த மாணவியை அடைய நினைத்துள்ளான் அசோக். இந்நிலையில் முன்தினம் அந்த மாணவியின் வீட்டில் யாரும் இல்லாமல் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது பெரியப்பா வீட்டுக்கு முழு போதையில் வந்த அசோக் எதிர் வீட்டில் உள்ள மாணவி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டான்.

இதனையடுத்து அந்த மாணவியின் வீட்டிற்கு குடிபோதையில் சென்ற அசோக் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த மாணவி கூச்சலிட்டதால் அவரது வாயை பொத்தி பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளான்.

இதனையடுத்து அசோக் குமாரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url