டிமென்ஷியா வராமல் தடுக்க ஒன்பது வழிகள்







Dementia எனப்படும் மறதிநோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர், தமது வாழ்நாளில் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டிருந்தால் இந்த நோய் ஏற்படாமலே தடுத்திருக்க முடியும் என்று சர்வதேச ஆய்வின் முடிவு தெரிவித்திருக்கிறது.

The Lancet சஞ்சிகையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாழ்நாள் முழுக்க மூளையை சுறுசுறுப்பாக செயற்பட வைத்திருப்பதன் மூலம் மூளை வலுவடையுமென்றும் அது முதுமையில் டிமென்ஷியா தோன்றுவதை தடுக்குமென்றும் புதிய ஆய்வின் முடிவு கூறுகிறது.

டிமென்ஷியாவுக்கான முக்கிய காரணம் முதுமை என்றாலும், அதற்கான முப்பத்தி ஐந்து சதவீத காரணிகளை முன்கூட்டியே தடுக்க முடியுமென்றும் கூறும் லான்செட் ஆய்வு, அதற்கு ஒன்பது விஷயங்களை சரிப்படுத்தவேண்டுமென்று பட்டியலிட்டிருக்கிறது.

கல்லாமை, காதுகேளாமை, புகைபிடித்தல், மனஅழுத்தம், சமூகத்தனிமை, உடலுழைப்பின்றி இருப்பது, அதிகரித்த இரத்த அழுத்தம், உடற்பருமன் மற்றும் நீரிழிவுநோய் ஆகியவையே அந்த ஒன்பது காரணிகள்.

மூன்றில் இரண்டுபங்கு டிமென்ஷியா நோயாளர்கள் அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நோய் முற்றுவதைத் தடுக்க இதுவரை மருந்தில்லை.

இருபத்தி ஓராம் நூற்றாண்டின் மிகப்பெரிய உயிர்கொல்லியாக டிமென்ஷியா மாறும் என்று எச்சரிக்கிறது அல்சைமர்ஸ் சங்கம்.

இந்த ஆபத்தை நாம் அனைவருமே உணர்ந்து அதற்கேற்ப நம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகளை நல்லவிதமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அது கோரியுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url