Type Here to Get Search Results !

பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக நீக்கம் செய்ய ஜெர்மன் கட்சி வேண்டுகோள்






ஜெர்மனி விரைவில் கரியமில வாயுவை வெளியிடும் வாகன எரிபொருட்களை படிப்படியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுங்கட்சியின் உறுப்பினர்பேசியுள்ளார்.

பிரிட்டின் 2040 அம் ஆண்டிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை தயாரிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஓலிவர் விட்கே எனும் போக்குவரத்து நிபுணர் வானொலியில் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

பிரிட்டன் 2050 ஆம் ஆண்டிலிருந்து படிம எண்ணெய் வகைகளை (பெட்ரோல் , டீசல்) தடை செய்யப்போகிறது. பிரிட்டன் எண்ணெயில் ஓடும் கார்களை 2040 ஆம் ஆண்டிலேயே தடை செய்ய திட்டமிடுகிறது. அப்போதுதான் 2050 ஆம் ஆண்டில் இக்கார்களை இயக்குவது குறையும் என்று குறிப்பிட்டார் ஜெர்மன் சூழலியல் அமைச்சர் மிஷெல் கோவே.

எனினும் ஜெர்மனியில்தான் வோல்ஸ்வேகன், டயாம்லர், பி எம் டபிள்யூ போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள். அப்படியிருக்கையில் இங்கிலாந்து ஜெர்மனியை முந்திக்கொண்டு டீசல் பெட்ரோல் எரிபொருட்களில் ஓடும் கார்களை தடை செய்வது ஒப்புக்கொள்ள முடியாதது என்றார் விட்கே. அத்துடன் தனது சக ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் எப்போதிலிருந்து டீசல் பெட்ரோல் கார்களை உற்பத்தி செய்வதை தடுப்பது  என்பது பற்றியும் தெளிவாக்க வேண்டும் என்று விட்கே கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad